Star7. சகிப்புத்தன்மை அற்ற மாசுச்சூழல்
நடந்தேறிய சில நிகழ்வுகளை பார்க்கும்போது, அகிம்சை, மத நல்லிணக்கம், சகிப்புத்தன்மையை போதித்த காந்தி பிறந்த மண்ணில் தான் நாமும் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. உதட்டளவில் மகாத்மாவுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகள், அவரைப் பற்றிச் சிந்திப்பதை எப்போதோ நிறுத்தி விட்டார்கள்!
சில சாம்பிள்கள்:
1. ஒரு பழுத்த அரசியல் தலைவரான கலைஞர், ராமரைப் பற்றிக் கூறிய கருத்துகள் வால்மீகி ராமாயணத்தில் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவரது பேச்சு ராமரை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிரானது என்று கொண்டாலும், அது மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதும், ஒரு மௌனப் பெரும்பான்மையை (அவருக்கு வாக்களித்தவர்களும் அதில் அடக்கம்!) காயப்படுத்துவதுமாகும் என்பதை அவர் உணர முடியாதவர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா? ஒரு இறை மறுப்பாளர் அப்படிப் பேசியதில் தவறில்லை என்று கேட்பவர்களுக்கு ஒரு கேள்வி: சென்ஸார் அனுமதி வழங்கிய டாவின்ஸி கோட் திரைப்படத்தை, மத நம்பிக்கையை காரணம் காட்டி தடை செய்தது ஏன் ?
2. அதைத் தொடர்ந்து, பெங்களூரில் பேருந்து எரிக்கப்பட்டதில், இரண்டு அப்பாவிகள் பலியானார்கள். கலைஞரின் மகள் வீடும் தாக்கப்பட்டது. "கண்ணுக்கு கண்" என்பது உலகத்தையே குருடாக்கி விடும் என்று காந்தி சொன்னதை நினைவு கூர்வது அவசியமாகிறது.
3. முதல்வரின் தலைக்கு விலை பேசிய வேதாந்தியின் சகிப்புத் தன்மை குறித்து என்னத்த சொல்ல!!!
4. பெங்களூரில் நடந்த வன்முறைக்கு பதிலாக, திமுகவினர் தமிழ்நாட்டிலுள்ள பிஜேபி அலுவலங்கள் மற்றும் தலைவர் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
5. ஒரு வாக்குப்பதிவு நடத்தி வெளியிட்டதற்காக, தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதும், மூன்று அப்பாவிகள் பலியானதும், நமது அரசியல் சூழலின் அழுகலை (நன்றி: ரோசா வசந்த்) வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
6. சமீபத்தில் சன்டிவி DTH தொடங்கப் போவதாக அறிவித்தவுடன், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கேபிள் ஒயர்களை அறுத்து வன்முறையில் ஈடுபட்டது நினைவிருக்கலாம். எந்தப் பிரச்சினைக்கும், பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக தீர்வு காணலாம் என்பது கால தாமதமாகவே உணரப்படுவது துரதிருஷ்டமே!
7. பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்ததாகக் கூறிக் கொண்டு, அவுட்லுக் மீது சிவசேனா தொ(கு)ண்டர்கள் மேற்கொண்ட வன்முறை இன்னொரு உதாரணம்!
8. நந்திகிராம், சிங்கூர் (state sponsored) வன்முறை குறித்து பேசாமல் இருப்பதே நலம்!
9. நம் கலாச்சாரக் காவலர்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் அனுமதியுடன், குஷ்பு விவகாரத்தின்போது அடித்த கூத்து பற்றி சொல்லவே வேண்டாம்! நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.
10. உத்திரப்பிரதேசத்தில், பெரியார் எழுதியதின் மொழிபெயர்ப்பான 'சச்சி ராமாயணம்' என்ற புத்தகத்தை வெளியிடக்கூடாது என்று பிஜேபியும், பஜ்ரங்தள்ளும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கூட சட்டசபையில் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுவது நல்ல காமெடி!
11. ஏதோ ஒரு வடநாட்டுக் கோயிலில், ராவணன் சிலையை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்று ஒரு கூட்டம் கலாட்டா செய்ததில், அது நிறுத்தப்பட்டது.
12. ஒரு காஷ்மீரத்து பள்ளியில், இஸ்லாமியச் சிறுமிகளை 'வந்தே மாதரம்' பாடலை பாட வைத்து விட்டதற்கு, 'இஸ்லாம் இறை உருவ வழிபாட்டுக்கு எதிரானது' என்ற காரணத்தை முன் வைத்து தேவையில்லாத சர்ச்சை எழுந்துள்ளது. தேசத்தை தாயாக பாவித்து எழுதப்பட்ட ஒரு பாட்டை குழந்தைகள் பாடியதை வைத்து பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் தான் என்ன?
13. கடந்த சில வருடங்களாக 'Valentine's Day' கொண்டாடிய இளைஞர்/இளைஞிகள் மீது வடநாட்டு (VHP/BajrangDal) கலாச்சாரக் காவலர்கள் ஏவி விட்ட வன்முறை குறித்து பல செய்திகள் வந்துள்ளன. தமது தலைவர்கள் "அப்பழுக்கற்றவர்கள்" என்று தவறாக எண்ணிக் கொண்டு தான், அவர்களின் தொண்டர்கள் இம்மாதிரி விரும்பத்தகாத வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது தான் மிகுந்த நகைப்புக்குரியது!
14. சமீபத்தில் தஸ்லிமாவின் விசாவை ரத்து செய்யக் கோரி நடந்த பேரணியின் தொடர்ச்சியாக நடந்தேறிய கல்கத்தா வன்முறையிலும், நந்திகிராம் வன்முறையிலும், மூன்று விஷயங்கள் யோசிக்கத் தக்கவை. ஒன்று, புகைந்து கொண்டிருக்கும் (மக்களின்) எரிச்சலையும், கோபத்தையும் எவ்வளவு சுலபமாக பற்ற வைத்து வன்முறையாக மாற்ற முடிகிறது என்பது, இரண்டு, மக்களுக்கு அரசு இயந்திரங்கள் மற்றும் ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிகள் மீதுள்ள நம்பிக்கையின்மை, மூன்று, அரசியல் கட்சிகளே சமூக விரோத சக்திகளை ஊக்குவிப்பது!
என்றென்றும் அன்புடன்
பாலா

7 மறுமொழிகள்:
இப்படி நாட்ல நடக்கற பிரச்சினை பற்றி கவலைப்பட ஆரம்பிச்சீங்கன்னா "என்றென்றும் டென்ஷனுடன் பாலா" ஆகிடுவீங்க...:)))))
நட்சத்திர வாழ்த்துக்கள்...
நட்சத்திர வாரத்தில் சென்னை ட்ராபிக் பற்றி பதிவு உண்டா ?
அன்புடன்
ரவி
என்றென்றும் அன்புள்ள பாலா,
நட்சத்திர வாரத்தில் நல்ல பல பதிவுகளை தர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//...வாக்குப்பதிவு நடத்தி வெளியிட்டதற்காக, தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதும், மூன்று அப்பாவிகள் பலியானதும், நமது அரசியல் சூழலின் அழுகலை (நன்றி: ரோசா வசந்த்) வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.//
'அழுகல்' என்ற வார்த்தையை நான் கண்டுபிடிக்கவில்லை; என்னால் மட்டும் அடிக்கடி அந்த வார்த்தை பயன்படுத்தப் படவும் இல்லை; பரவலாக புழக்கத்தில் உள்ளதுதான். அதனால் இந்த வார்த்தைக்கு எல்லாம் என்னை aknowledge செய்யும் அவசியம் இல்லை என்று தோன்றுகிறது. மேலும் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது ஒரு ரௌடித்தனமான அராஜகம் என்று மட்டுமே நினைக்கிறேன். நமது அரசியலின் அழுகலின் உதாரணமாக நான் இதை நினைக்கவில்லை. என் பெயர் பயன்படுத்தப் பட்டதில் ஆபத்து எதுவும் இருப்பதாக நினைக்காவிட்டாலும், ஒரு பயன் கருதி இந்த குறிப்பு.
மீண்டும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த நட்சத்திர வார வாழ்த்துக்கள். உங்களின் கடந்த பதிவுகள் பயனுள்ளதாகவும், வாசிக்க சுவாரசியமானதாகவும் இருந்ததை இங்கே குறிப்பிடுகிறேன். அதற்கு நன்றி.
பாலா சார்,
உங்கள் உணர்வுகள் இன்றைய இந்தியத் தேவை.
வட இந்தியாவில், உத்திரப்பிரதேசம், மேற்குவங்காளம் வரை வந்தீர்கள். அப்படியே இன்னும் கிழக்கேயும் இந்தியா மிச்சமிருக்கிறது தெரியுமா? அங்கே கடந்த வாரம் ஆதிவாசிகள் ஊர்வலத்தின் மீது நடந்த அடக்குமுறைக் கொடுமைகளை விட்டு விட்டீர்களே.
ரவி,
நன்றி. டென்ஷன் எல்லாம் ஒண்ணும் இல்ல ! நடக்கறத சுட்டிக் காட்டினேன், அம்புடுதேன் :)
வசந்த்,
கருத்துக்கு நன்றி. 'அழுகல்' என்ற பதத்தை நானறிந்து நீங்கள் அதிகம் பயன்படுத்தியிருப்பதாகத்
தோன்றியதால், ஒரு 'நன்றி' சொன்னேன், சீரியஸாக எதுவும் இல்லை !
சமயம் கிடைக்கும்போது இவ்வாரப் பதிவுகளை வாசித்து, கருத்திருப்பின் கூறவும்.
ரத்னேஷ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆதிவாசிகள் மீது ஏவி விடப்பட்ட வன்முறையைப் பற்றி
தனிப்பதிவிடலாம் என்று உத்தேசம் !
சமீபத்தில் தமிழ்வலையுலகத்தில் நுழைந்த பதிவர்களில் சுவாரசியமாகவும், நல்ல நடையோடும் எழுதுவதாக
நான் கருதும் சிலரில் தாங்கள் இருக்கிறீர்கள். உங்களது சில பதிவுகளை வாசித்திருக்கிறேன்,
பின்னூட்டம் தான் இட்டதில்லை !
எ.அ.பாலா
Valaiyulagil iththagaiya pathivugal parimaaRikkoLvathu nalla amsamaaka ullathu.
ko.sivakumaar.
//Valaiyulagil iththagaiya pathivugal parimaaRikkoLvathu nalla amsamaaka ullathu.
ko.sivakumaar.
//
Thanks !
vasanth,
//மேலும் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது ஒரு ரௌடித்தனமான அராஜகம் என்று மட்டுமே நினைக்கிறேன். நமது அரசியலின் அழுகலின் உதாரணமாக நான் இதை நினைக்கவில்லை. என் பெயர் பயன்படுத்தப் பட்டதில் ஆபத்து எதுவும் இருப்பதாக நினைக்காவிட்டாலும், ஒரு பயன் கருதி இந்த குறிப்பு.
//
What I meant was that Goondaism and violence have some connection to political power :(
Post a Comment